இந்து சமயம் இந்தியாவில் தோன்றிய, காலத்தால் மிகவும் தொன்மையான உலகின் முக்கிய சமயங்களில் ஒன்றெனக் கருதப்படுகிறது. பெரும்பாலான இந்துக்கள் இந்தியாவிலும், நேபாளத்திலும் வசிக்கின்றார்கள். இலங்கை, இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர், சுரினாம், பிஜி தீவுகள், அமெரிக்கா, கனடா மற்றும் பிற பல நாடுகளிலும் இந்துக்கள் குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையில் வசிக்கின்றார்கள்.
பிற சமயங்கள் போலன்றி இந்து சமயத்தைத் தோற்றுவித்தவர் என்று யாருமில்லை. இதனை நெறிப்படுத்த அல்லது கட்டுப்படுத்த என ஒரு மைய அமைப்பு இதற்கு இல்லை. பல்வேறு வகையில் பரவலான நம்பிக்கைகள், சடங்குகள், சமய நூல்கள் என்பவற்றைக் உள்வாங்கி உருவான ஒரு சமயமே இந்து சமயம்.
உங்கள் இந்து சமய அறிவை சோதித்து பாருங்கள்
மஹாபாரதம் யாரால் எழுதப்பட்டது?
இராமாயணம் எந்த யுகத்துக்கு உரியது?
முருக பெருமானால் கொல்லப்பட்ட அசுரனின் பெயர்?
குந்தி தேவியின் கணவர் யார்?
ஐயப்ப சுவாமியின் தாயார் பெயர்?
கல்விக் கடவுள் யார்?
மஹாவிஷ்ணுவின் ஆறாவது அவதாரம்?
திருவண்ணாமலையில் சிவனின் பெயர் என்ன?
மஹா விஷ்ணுவின் முதல் அவதாரம்?
எக்காரியத்தையும் துவங்கும் முன் வணங்கப்படும் கடவுள் யார்?
Share your Results:
Good job